Eligibility - TA 🇮🇳

a clinical study for people with

ulcerative colitis

TH2262~3.PNG
  • 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண்கள் இந்த ஆய்வில் பங்கேற்க தகுதி பெறுகிறார்கள். மேலும் தகவலுக்கு, உங்கள் மருத்துவரை ஆலோசிக்கவும்

    இங்கே சொடுக்கவும்

  • பங்கேற்பாளர்கள் ஒரு கையொப்பமிட்ட தகவலறிந்த ஒப்புதல் படிவத்தை வழங்க முடிய வேண்டும்.

  • கொலோனோஸ்கோபி மூலம் உறுதிசெய்யப்பட்ட வகையில், மலவாய் முனையிலிருந்து 15 செமீ (5.9 இஞ்சு) -ற்கும் மிகாத அளவில் உள்ள மிதமானது முதல் கடுமையானது வரையிலான அல்சரேட்டிவ் கோலைட்டிஸ் பங்கேற்பாளர்களுக்கு கண்டறியப்பட்டு உறுதிசெய்யப்பட்டிருக்க வேண்டும்.

  • பங்கேற்பாளர்களுக்கு கடந்த காலத்தில் மேலும் விரிவான நோய்க் கண்டறிதல் வரலாறு இருக்கலாம், ஆனால் சேர்க்கப்படும் நேரத்தில், மலக்குடல் அளவுக்கு செயல்பாட்டிலுள்ள அல்சரேட்டிவ் கோலைட்டிஸ் கொண்ட நோயாளிகள் மட்டுமே பங்கேற்புக்கு தகுதி பெறுவார்கள்.

  • குழந்தை பெற்றெடுக்கும் ஆற்றலுள்ள ஆண், பெண்கள் உடலுறவில் ஈடுபடாதவர்களாக இருக்க வேண்டும் அல்லது ஆய்வு தொடங்குவதற்கு முன்பு குறைந்தது 21 நாட்களுக்கும் மற்றும் சிகிச்சைக் காலகட்டம் முழுவதும் ஏற்புள்ள பிறப்புக் கட்டுப்பாட்டு முறைகளைப் பயன்படுத்த சம்மதிக்க வேண்டும்.

  • மலவாய் புணர்ச்சி, ஆனல் பிளீச்சிங் மற்றும் வேக்ஸிங் போன்றவற்றிலிருந்து தவிர்ந்திருக்கத் தயாராக உள்ள பங்கேற்பாளர்கள்.

  • பாக்டீரியா அல்லது பிற தொற்றுள்ள பெருங்குடல் அழற்சி, கதிரியக்க-குடலழற்சி மற்றும் கதிரியக்க-குதவழற்சி, குரோன்ஸ் நோய், நார் சார்ந்த பெருங்குடல் அழற்சி, வரையறையற்ற பெருங்குடல் அழற்சி, மறுமுறை வந்த கணைய நோய், திசுத்தடின பித்தக் குழாய் அழற்சி, கல்லீரல் கடினமாகுதல் அல்லது கல்லீரல் செயல்பாதிப்பு, இடுப்பில் இரத்தக்குழாய் சாராத திசு அழிவு நிலவிய வரலாறு அல்லது தற்போது உள்ளதாகக் கண்டறிதல்.

  • முன்பு இரைப்பைக் குடலிய அறுவைசிகிச்சைக்கான சாத்தியம் நீக்கப்படுதல், பிற செயல்பாட்டிலுள்ள இரைப்பைக் குடலிய நோய் (மலக்குடல் உறுத்தல் நோய் தவிர) அல்லது குடல் உள்ளமைப்பு சிதறல்.

  • சேர்க்கப்படும் நேரத்தில் மலவாயில் இரத்தக்கசிவுடன் வீங்கியுள்ள சிரைகள் அல்லது செயல்பாட்டிலுள்ள முழுவுடல் நோய்த்தொற்று.

  • மறுமுறை வந்த டைவர்டிகுலைட்டிஸ் வரலாறு மற்றும்/அல்லது சேர்க்கப்படும் நேரத்தில் டைவர்டிகுலைட்டிஸ் இருப்பது.

  • ஆய்வு நெறிமுறையில் விலக்கல் வரம்புநிலைகளாக பட்டியலிடப்பட்டுள்ள கடுமையான, வளர்கிற அல்லது கட்டுப்படுத்தப்படாத நோய்கள் ஏற்கனவே கண்டறியப்பட்ட வரலாறு. 

  • மருத்துவ ரீதியாக குறிப்பிடத்தக்க ஈசிஜி இயல்பற்ற தன்மை, அல்லது ஸ்கிரீனிங்கில் இயல்பற்ற கல்லீரல் செயல்பாடு சுயவிவரம்.

  • சீரம் ஹீமோகுளோபின் அளவுகள் <7.5 கிராம்/டெலி.

  • சைட்டோமெகலோ வைரஸ், காசநோய், ஹியூமன் இம்யூனோடெஃபிஷன்சி வைரஸ், ஹெப்படைட்டிஸ் பி அல்லது சி தொற்று ஆகியவற்றுக்கு ஸ்கிரீனிங்கில் பாசிடிவ் பரிசோதனை முடிவு.

  • அட்டிசன்ஸ் நோய், பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளாஸியா அல்லது இதர வடிவிலான அட்ரீனல் பற்றாக்குறை உள்ளதாகக் கண்டறிதல்.

  • ஸ்டெராய்டு சிகிச்சை பலனளிக்காத அல்சரேட்டிவ் கோலைட்டிஸ் நிலவிய வரலாறு.

  • குடல்சார் நோய்க் கிருமிகள், க்ளாஸ்ட்ரிடியம் டிஃபிசைல், அல்லது ஓவா மற்றும் ஒட்டுண்ணிகளின் இருப்பு ஆகியவற்றுக்கு ஸ்கிரீனிங்கில் பாசிடிவ் மலப் பரிசோதனை முடிவு.

  • ஸ்கிரீனிங் சமயத்தில் கர்ப்பமாகவுள்ள அல்லது தாய்ப்பால் ஊட்டுகிற பெண்கள்.

  • ஸ்கிரீனிங் வருகைக்கு முந்தைய 30 நாட்களுக்குள் மற்றும் ஆய்வின் போது ஓர் ஆராய்ச்சிக்குரிய மருந்து குறித்த இன்னொரு ஆராய்ச்சி ஆய்வில் பங்கேற்பது.

 

ஆய்வில் என்ன நடைபெறும் மற்றும் ஆய்வுப் பங்கேற்பாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி மேலும் அறிந்துகொள்ள, இங்கே சொடுக்கவும்


உலகளவில் உள்ள மருத்துவ ஆராய்ச்சித் தலங்களுக்கு தற்போது ஆளெடுத்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் அருகேயுள்ள ஓர் ஆராய்ச்சித் தலத்தை அறிவதற்கு, தயவுசெய்து இங்கே சொடுக்கவும்

GB 4.1.5.3 Cessa flavicon.png
 

செஸ்ஸா என்பது, அல்சரேட்டிவ் கோலைட்டிஸ் உள்ள நோயாளிகளுக்கான ஒரு நடப்பு மருத்துவ ஆய்வின் பெயர். இது வணிக ரீதியாகக் கிடைக்கக்கூடிய ஒரு சிகிச்சை அல்ல.

உங்களுக்கு ஐபிடி தொடர்பான அறிகுறிகள் இருந்தால், உங்கள் இரைப்பைக் குடலிய நிபுணரை தொடர்புகொள்ளவும்.