Privacy Policy - TA 🇮🇳

a clinical study for people with

ulcerative colitis

தனிமைக்காப்பு கொள்கை


அமல்செய்யப்படும் தேதி: ஜனவரி 1, 2020 அறிவிப்புப் பதிப்பு: 1.0

இந்த ஆவணம் எங்கள் வலைத்தளமான cessa-uc.com -இன் தனியுரிமை அறிவிப்பை நிர்வகிக்கிறது. இது Cessa-uc வலைத்தளத்தின் உரிமையாளர் மற்றும் ஆபரேட்டரான Cristcot HCA LLC (“Cristcot”, “cessa”, “cessa-uc” அல்லது „வலைத்தளம்” என அழைக்கப்படுகிறது), நீங்கள் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்தும் போது எந்த “தனிப்பட்ட தரவைப்” பயன்படுத்துகிறது மற்றும் பாதுகாக்கிறது என்று விவரிக்கிறது.

உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் எவ்வாறு சேகரிக்கிறோம், பயன்படுத்துகிறோம், பாதுகாக்கிறோம் அல்லது கையாளுகிறோம் என்பதைப் பற்றிய தெளிவான புரிதலைப் பெற எங்கள் தனியுரிமை அறிவிப்பைத் தயவுசெய்து கவனமாகப் படிக்கவும்.

இந்தப் பக்கத்தைப் புதுப்பிப்பதன் மூலம் அவ்வப்போது இந்த தனியுரிமை அறிவிப்பை நாங்கள் மாற்றலாம். எவையேனும் மாற்றங்கள் இருந்தால் அவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த நீங்கள் அவ்வப்போது இந்தப் பக்கத்தைச் சரிபார்க்க வேண்டும்.

இந்தக் கொள்கை தொடர்பான கேள்விகள் மற்றும் கருத்துகளுக்கான தொடர்புத் தகவல்: research@cessa-uc.com.

எங்கள் தனியுரிமை அறிவிப்பில் உள்ளடக்கப்பட்ட தலைப்புகள்

உங்கள் உரிமைகள்

நாங்கள் என்ன தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கிறோம்?

உங்கள் தகவலை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம்?

உங்கள் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துவதற்கான காரணங்கள்

உங்கள் தகவலை நாங்கள் எவ்வாறு பாதுகாக்கிறோம்?

உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் தக்கவைத்துக்கொள்ளுதல் மற்றும் அழித்தல்

சட்டப்பூர்வமாகத் தேவையான தகவல் வெளிப்படுத்துதல்கள்

வாரிசுகளுக்கு வெளிப்படுத்துதல்கள்

உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துவதற்கான உங்கள் ஒப்புதலைத் திரும்பப் பெறுதல்

சர்வதேசத் தரவு இடமாற்றங்கள் மற்றும் சேமிப்பு

இணைய பீக்கான்கள்

Goggle Ad மற்றும் உள்ளடக்க நெட்வொர்க் தனியுரிமை அறிவிப்பு

Google Analytics தனியுரிமை அறிவிப்பு

Google மறு சந்தைப்படுத்துதல்

Facebook மறு சந்தைப்படுத்துதல்

உங்கள் தனிப்பட்ட தகவல்கள் குறித்து எங்களைத் தொடர்புகொள்ளுதல்

கண்காணிக்க வேண்டாம் அமைப்புகள்

உங்கள் கிரெடிட் கார்டின் பயன்பாடு

COPPA (குழந்தைகள் ஆன்லைன் தனியுரிமைப் பாதுகாப்பு சட்டம்)

எங்கள் தனியுரிமைக் கொள்கை பற்றியக் கேள்விகள்

உங்கள் உரிமைகள்
எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்தும் போது மற்றும் தனிப்பட்ட தரவை எங்களிடம் சமர்ப்பிக்கும் போது, பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை (ஜிடிபிஆர்) மற்றும் பிற சட்டங்களின் கீழ் உங்களுக்குச் சில உரிமைகள் இருக்கலாம். உங்கள் தனிப்பட்ட தரவை செயலாக்குவதற்கான சட்ட அடிப்படையைப் பொறுத்து, உங்களுக்கு பின்வரும் சில அல்லது அனைத்து உரிமைகளும் இருக்கலாம்:

தகவல் தெரிவிக்கப்பட உரிமை

உங்களிடமிருந்து நாங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட தரவு குறித்து மற்றும் அதை நாங்கள் எவ்வாறு செயலாக்குகிறோம் என்பது குறித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட உங்களுக்கு உரிமை உண்டு.

அணுகல் உரிமை

உங்கள் தனிப்பட்ட தரவு செயலாக்கப்படுகிறது என்பதன் உறுதிப்படுத்தலைப் பெற உங்களுக்கு உரிமை உள்ளது மற்றும் உங்கள் தனிப்பட்ட தரவை அணுகும் திறன் உங்களுக்கு உள்ளது.

திருத்துவதற்கான உரிமை

உங்கள் தனிப்பட்ட தரவு தவறானதாக அல்லது முழுமையற்றதாக இருந்தால் அதைச் சரிசெய்ய உங்களுக்கு உரிமை உண்டு.

நீக்குவதற்கான உரிமை (மறக்கப்படுவதற்கான உரிமை)

உங்கள் தனிப்பட்ட தரவைத் தொடர்ந்து செயலாக்குவதற்கு எந்தவொரு பலமான காரணமும் இல்லாவிட்டால், உங்கள் தனிப்பட்ட தரவை நீக்க அல்லது நீக்குமாறு கோர உங்களுக்கு உரிமை உண்டு.

செயலாக்கத்தைக் கட்டுப்படுத்தும் உரிமை

உங்கள் தனிப்பட்ட தரவின் செயலாக்கத்தைத் 'தடுக்க' அல்லது கட்டுப்படுத்த உங்களுக்கு உரிமை உண்டு. உங்கள் தனிப்பட்ட தரவு கட்டுப்படுத்தப்படும் போது, உங்கள் தரவைச் சேமிக்க எங்களுக்கு அனுமதி உண்டு, ஆனால் அதை மேலும் செயலாக்க எங்களுக்கு அனுமதி இல்லை.

தரவு பெயர்வுதிறனுக்கான உரிமை

நீங்கள் எங்களுக்கு வழங்கிய உங்கள் தனிப்பட்ட தரவைக் கோரவும், அதைப் பெறவும் உங்களுக்கு உரிமை உண்டு, மற்றும் அதை உங்கள் சொந்த நோக்கங்களுக்காக நீங்கள் பயன்படுத்தலாம். நீங்கள் கோரிக்கை செய்த 30 நாட்களுக்குள் உங்கள் தரவை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம். உங்கள் தனிப்பட்ட தரவைக் கோர, இந்த தனியுரிமை அறிவிப்பின் மேலே உள்ள தகவல்களைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

ஆட்சேபம் தெரிவிப்பதற்கான உரிமை

பின்வரும் காரணங்களுக்காக உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குவதற்கு ஆட்சேபம் தெரிவிப்பதற்கு உங்களுக்கு உரிமை உண்டு:

செயலாக்கம் முறையான நலன்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது அல்லது பொது நலன்/அதிகாரப்பூர்வ அதிகாரத்தின் கீழ்ச் செய்யப்பட்ட பணி (சுயவிவரமாக்கல் உட்பட);

· நேரடி சந்தைப்படுத்தல் (சுயவிவரமாக்கல் உட்பட);

· செயலாக்கம் அறிவியல்/வரலாற்று ஆராய்ச்சி மற்றும் புள்ளிவிவரங்களின் நோக்கங்களுக்காக இருந்தது.

· தானியங்கி தனிப்பட்ட முடிவெடுக்கும் மற்றும் சுயவிவரமாக்கல் பயன்பாடுகளாகும்.

· அதிகாரிகளிடம் புகார் அளித்தல்

பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறைக்கு இணக்கமாக உங்கள் தகவல்கள் செயல்படுத்தப்படாவிட்டால் மேற்பார்வை அதிகாரிகளிடம் புகார் அளிக்க உங்களுக்கு உரிமை உண்டு. மேற்பார்வை அதிகாரிகள் உங்கள் புகாரை முறையாகத் தீர்க்கத் தவறினால், நீதித்துறை தீர்வுக்கான உரிமை உங்களுக்கு இருக்கலாம்.

நாங்கள் என்ன தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கிறோம்?

நீங்கள் எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடும்போது உங்களிடமிருந்து தகவல்களை நாங்கள் சேகரிப்பதில்லை. ஒரு ஆர்டர் செய்ய, செய்திமடலுக்கு குழுசேர அல்லது எங்கள் வலைத்தளத்தில் தகவல்களை உள்ளிடுவதற்கான வழியை நாங்கள் வழங்கவில்லை. எங்கள் வலைத்தளத்தில் படிவங்கள் அல்லது தொடர்பு உள்ளீட்டுப் புலங்கள் எவையும் இல்லை.  இது திட்டமிட்டே செய்யப்பட்டது. உங்கள் கணினியில் உள்ள ஐபி முகவரி வழியாக இணையத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தனிப்பட்ட முறையில் அடையாளம் காண முடியாத தகவல்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன. எங்களுடைய வலைத்தளங்களை நீங்கள் பார்வையிடும்போது மூன்றாம் தரப்பினரால் சேகரிக்கப்பட்ட தகவல்கள் இதில் அடங்கும்.

நீங்கள் எங்கள் வலைத்தளத்தை உலாவும்போது, ஹோஸ்டிங் சேவையகங்களால் பதிவுசெய்யப்பட்ட போக்குவரத்துத் தரவை நாங்கள் பெறலாம், தனிப்பட்ட முறையில் அடையாளம் காண முடியாத சில தகவல்களையும் உங்கள் கணினியின் இணைய நெறிமுறை (ஐபி) முகவரியையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய குக்கீகள். Google Analytics போன்ற போக்குவரத்துப் பகுப்பாய்விற்காக பிற வெளிப்புற சேவைகள் வழங்கும் தகவல்களையும் நாங்கள் பயன்படுத்தலாம்.

உங்கள் தகவலை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம்?

Google Analytics போன்ற மூன்றாம் தரப்பினரிடமிருந்து நாங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட முறையில் அடையாளம் காண முடியாத தகவல்களை பின்வரும் முக்கிய நோக்கங்களுக்காக நாங்கள் பயன்படுத்தலாம்:

· வலைத்தளத்தை இயக்குவதற்கும், அதில் விவரிக்கப்பட்டுள்ள தகவல்களை உங்களுக்கு வழங்குவதற்கும்.

· எங்கள் வலைத்தளத்தின் மற்றும் தகவல்களின் தரத்தை மேம்படுத்த.

· உள்ளகப் பதிவு வைத்தல் மற்றும் புள்ளிவிவர நோக்கங்களுக்காக.

உங்கள் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துவதற்கான காரணங்கள்

உங்கள் தொடர்பாக நாங்கள் சேகரிக்கும் மற்றும் சேமிக்கும் தகவல்கள் முதன்மையாக உங்களுக்குத் தகவல்களை வழங்க எங்களுக்கு உதவுகின்றன.

துணை நிறுவனங்கள் மற்றும் பிற மூன்றாம் தரப்பினருடன் தகவல்களைப் பகிர்தல்

எங்கள் பயனர்கள் பற்றிய தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவலை அல்லது தனிப்பட்ட தரவை மூன்றாம் தரப்பினருக்கு நாங்கள் விற்கவோ, வர்த்தகம் செய்யவோ அல்லது இடமாற்றம் செய்யவோ மாட்டோம்.

எங்கள் வலைத்தளத்தை இயக்குவதில், எங்கள் வணிகத்தை நடத்துவதில் ஈடுபடுபவர்கள் (வழக்கறிஞர்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் உட்பட) மருத்துவ ஆராய்ச்சியில் வணிகப் பங்காளிகள் அல்லது வருங்கால வணிகக் கூட்டாளர்கள் மற்றும் தொழில்துறை வணிக நடவடிக்கைகளான எங்கள் சொத்துக்களை விற்பனை செய்தல், கையகப்படுத்துதல் அல்லது இணைத்தல் போன்றவற்றில் எங்களுக்கு உதவும் பிற தரப்பினர் இதில் உள்ளடங்கவில்லை. இந்த தகவல்களை இரகசியமாக வைத்திருக்கவும், தனிப்பட்ட தரவு பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிகளின்படி அவற்றைக் கையாளவும் அந்த தரப்புகள் அனைத்தும் ஒப்புக்கொள்கின்றன.

சட்டத்திற்கு இணங்க, எங்கள் தளக் கொள்கைகளை அமல்படுத்துவதற்கு அல்லது எங்கள் அல்லது பிறரின் உரிமைகள், சொத்து அல்லது பாதுகாப்பைப் பாதுகாப்பது பொருத்தமானதாக இருக்கும்போது கூட நாங்கள் தகவலை வெளியிடலாம்.

இருப்பினும், தனிப்பட்ட முறையில் அடையாளம் காண முடியாத பார்வையாளர் தகவல் பிற தரப்பினருக்கு சந்தைப்படுத்தல், விளம்பரம் அல்லது பிற ஒத்த பயன்பாடுகளுக்கு வழங்கப்படலாம்.

உங்கள் தகவலை நாங்கள் எவ்வாறு பாதுகாக்கிறோம்?

எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடும் வருகையாளர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்களை நாங்கள் சேகரிப்பதில்லை. உங்கள் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணமுடியாத பார்வையாளர் தகவல்கள் பாதுகாக்கப்பட்ட சேவையகங்களால் மற்றும் நெட்ர்வொர்க்குகளில் சேமித்து வைக்கப்படுகின்றன மற்றும் இவை அத்தகைய அமைப்புகளுக்கு சிறப்பு அணுகல் உரிமைகளைக் கொண்ட ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களால் மட்டுமே அணுகக்கூடியவை மற்றும் தகவல்களை அவர்கள் இரகசியமாக வைத்திருக்க வேண்டும்.

உங்கள் தனிப்பட்ட தரவின் பாதுகாப்பைப் பாதுகாக்க தொழிலில் சிறந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் உறுதிப்பாட்டுக் கருவிகளைப் பயன்படுத்தி எங்கள் வலைத்தளத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். நாங்களும், எங்களுக்காக சேவைகளை வழங்கும் மூன்றாம் தரப்பினரும், உங்கள் தனிப்பட்ட தரவைப் பாதுகாக்க தொழில்நுட்ப மற்றும் பௌதிக பாதுகாப்புகளைப் பராமரிக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக, உங்கள் தனிப்பட்ட தரவின் இழப்பு அல்லது தவறான பயன்பாட்டிற்கு அல்லது இணையத்தின் பாதுகாப்பான தரவு பரிமாற்றத்திற்கு எங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது. எங்கள் வலைத்தளத்திற்கான உங்கள் வருகையிலிருந்து தனிப்பட்ட முறையில் அடையாளம் காண முடியாத பார்வையாளர் தகவல்களைச் சேகரிக்கும் மூன்றாம் தரப்பினருக்கான சில விலகல் விருப்பங்களைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தரவைப் பாதுகாக்கவும், அதை யாருடனும் பகிர வேண்டாம் என்றும் நாங்கள் உங்களைப் பலமாக வற்புறுத்துகிறோம். ஓர் இணைய உலாவியைப் பயன்படுத்துவதை நீங்கள் முடிக்கும்போது நீங்கள் எப்போதும் வெளியேற வேண்டும், குறிப்பாக நீங்கள் ஒரு பொது இடத்தில் கணினியைப் பகிர்கிறீர்கள் அல்லது பயன்படுத்துகிறீர்கள் என்றால்.

உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் தக்கவைத்துக்கொள்ளுதல் மற்றும் அழித்தல்

எங்கள் வலைத்தளத்தை நீங்கள் பார்வையிடும் போது நாங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணமுடியாத தகவல்களை சட்டம் அல்லது வணிக நோக்கங்களுக்காக எங்களுக்கு தேவைப்படும் வரை மட்டுமே வைத்திருப்போம். உங்கள் தகவல்கள் மின்னணு வடிவத்தில், காகித வடிவத்தில் அல்லது இரண்டின் கலவையில் தக்கவைக்கப்படலாம். உங்கள் தகவல் இனி தேவைப்படாதபோது, நாங்கள் அதை அழித்துவிடுவோம் அல்லது நீக்கிவிடுவோம்.

சட்டப்பூர்வமாகத் தேவையான தகவல் வெளிப்படுத்தல்கள்

உங்கள் தனிப்பட்ட தரவைப் பின்வரும் சந்தர்ப்பங்களில் நாங்கள் சட்டப்பூர்வமாக வெளியிட வேண்டியிருக்கும், இதுபோன்ற வெளிப்பாடு (அ) நீதிமன்ற ஆணை, சட்டம் அல்லது பிற சட்டச் செயல்முறைகளுக்கு தேவைப்பட்டால் (ஆ) சட்ட அமலாக்க அதிகாரிகள் அல்லது அரசாங்க அமலாக்க முகமைகளுக்கு உதவுவதற்கு தேவைப்பட்டால்; (இ) எங்கள் சட்ட விதிமுறைகளை மீறுவது அல்லது நடைமுறைப்படுத்துவது தேவைப்பட்டால்; (ஈ) நீங்கள் மற்றும் / அல்லது பிற பயனர்கள் அல்லது உறுப்பினர்கள் உட்பட மூன்றாம் தரப்பினரிடமிருந்து சட்ட நடவடிக்கை அல்லது உரிமைகோரல்களில் இருந்து எங்களைப் பாதுகாக்கத் தேவைப்பட்டால்; அல்லது (இ) எங்கள் நிறுவனம், பயனர்கள், ஊழியர்கள் மற்றும் துணை நிறுவனங்களின் சட்ட உரிமைகள், தனிப்பட்ட / உண்மையான சொத்து அல்லது தனிப்பட்ட பாதுகாப்பைப் பாதுகாக்கத் தேவைப்பட்டால்.

வாரிசுகளுக்கு வெளிப்படுத்தல்கள்

எங்கள் தொழில் விற்கப்பட்டால் அல்லது முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மற்றொரு வணிகத்துடன் ஒன்றிணைந்தால், அது வலைத்தளத்தை உங்களுக்கு வழங்குவதற்கும் பொறுப்பாகும், உங்கள் தனிப்பட்ட தகவல்களை புதிய வணிகத்திற்கு மாற்றுவதற்கான உரிமையை நாங்கள் வைத்திருக்கிறோம். புதிய வணிகமானது இந்தத் தனியுரிமை அறிக்கையின் விதிமுறைகளின்படி உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துவதற்கான உரிமையையும், புதிய வணிகத்தால் நிறுவப்பட்ட இந்த தனியுரிமை அறிக்கையில் எவையேனும் மாற்றங்களையும் தக்க வைத்துக் கொள்ளும். எங்கள் நிறுவனம் திவால்நிலைக்கு வந்தால் மற்றும் எங்கள் சொத்துகள் அனைத்தும் வேறு தனிநபர் அல்லது வணிகத்திற்கு விற்கப்பட்டால் உங்கள் தனிப்பட்ட தகவல்களை மாற்றுவதற்கான உரிமையையும் நாங்கள் வைத்திருப்போம்.

உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துவதற்கான உங்கள் ஒப்புதலைத் திரும்பப் பெறுதல்

உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துவதற்கான உங்கள் ஒப்புதலை எந்த நேரத்திலும் இரத்து செய்ய உங்களுக்கு உரிமை உண்டு. அத்தகைய விலகிக்கொள்ளுதல், மற்றபடி சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட வெளிப்படுத்தல்களைப் பாதிக்காது, அவற்றில் பின்வருபவை அடங்கும், ஆனால் இவை மட்டும் அல்ல: (i) துணை நிறுவனங்கள் மற்றும் வணிக கூட்டாளர்களுக்கு வெளிப்படுத்தல்கள், (ii) கணினி அமைப்பு போன்ற எங்கள் வணிகத்திற்கான சில சேவைகளை வழங்கும் மூன்றாம் தரப்புச் சேவை வழங்குநர்களுக்கான வெளிப்படுத்தல்கள். சேவைகள், தரவு மேலாண்மைச் சேவைகள் மற்றும் வலைத்தளத்தைப் பராமரிக்க உதவும் மற்றவர்களுக்கு வெளிப்படுத்தல்கள்(iii) உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான மூன்றாம் தரப்பினருக்கு வெளிப்படுத்தல்கள், (iv) அரசு நிறுவனங்கள் அல்லது சட்ட அமலாக்கத் துறைகளுக்கு பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் செய்யப்பட வேண்டிய வெளிப்படுத்தல்கள் அல்லது, (v) மூன்றாம் தரப்பினருக்கு முன்னர் செய்யப்பட்ட வெளிப்படுத்தல்கள். உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துவதற்கான உங்கள் ஒப்புதலை நீங்கள் இரத்து செய்ய விரும்பினால், இந்த அறிவிப்பின் மேற்பகுதியில் காணப்படும் தொடர்புத் தகவல்களைப் பயன்படுத்தி நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

சர்வதேசத் தரவு இடமாற்றங்கள் மற்றும் சேமிப்பு

எங்கள் வலைத்தளத்தை நீங்கள் பார்வையிடும்போது நாங்கள் சேகரிக்கும் அடையாளம் காணமுடியாத தனிப்பட்ட தரவு, நாங்கள் தொழில் செய்யும் எந்த நாடுகளுக்கும், குறிப்பாக யுனைட்டெட் ஸ்டேட்ஸ் -க்கும் இடையில் சேமிக்கப்படலாம், செயலாக்கப்படலாம் மற்றும் மாற்றப்படலாம். ஜிடிபிஆர் -இன் 45 வது பிரிவின் கீழ் தனிப்பட்ட தரவுகளின் போதுமான அளவு பாதுகாப்பு யுனைடட் ஸ்டேட்ஸ் -இல் இல்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. ஜிடிபிஆர் -இன் பிரிவு 49 -இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கான விதிவிலக்குகளை எங்கள் நிறுவனம் நம்பியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய வாடிக்கையாளர்கள் மற்றும் பயனர்களுக்கு, உங்கள் ஒப்புதலுடன், உங்கள் தனிப்பட்ட தரவு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே யுனைடட் ஸ்டேட்ஸ் -க்கு மாற்றப்படலாம். உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் எங்கு மாற்றினாலும், செயலாக்கினாலும், சேமித்தாலும், அதைப் பாதுகாக்க நியாயமான நடவடிக்கைகளை எடுப்போம். உங்களிடமிருந்து நாங்கள் சேகரிக்கும் தகவல்களை எங்கள் தனியுரிமை அறிக்கைக்கு ஏற்பப் பயன்படுத்துவோம். எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த பிரிவில் விவரிக்கப்பட்டுள்ள உங்கள் தனிப்பட்ட தரவின் இடமாற்றங்களுக்கு நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

இணைய பீக்கான்கள்

எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதைப் பற்றித் தனிப்பட்ட முறையில் அடையாளம் காண முடியாத தகவல்களை சேகரிக்க வலை பீக்கான்கள் என்ற தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்தலாம். வலை பீக்கான்கள் மூலம் நாங்கள் சேகரிக்கக்கூடிய தகவல்கள் எங்கள் பார்வையாளர்களின் நடத்தையைப் புள்ளிவிவர ரீதியாகக் கண்காணிக்க அனுமதிக்கும்.

Goggle Ad மற்றும் உள்ளடக்க நெட்வொர்க் தனியுரிமை அறிவிப்பு

Google உள்ளிட்ட மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள், எங்கள் வலைத்தளத்திற்கு பயனரின் கடந்த வருகைகளின் அடிப்படையில் விளம்பரங்களை வழங்க குக்கீக்களைப் பயன்படுத்துகின்றனர். DoubleClick குக்கீயை Google பயன்படுத்துவது பயனர்களுக்கும், எங்கள் தளத்திற்கும் / அல்லது இணையத்தில் உள்ள பிற தளங்களுக்கும் அவர்கள் பார்வையிட்டதன் அடிப்படையில் பயனர்களுக்கு விளம்பரங்களை வழங்க உதவுகிறது. http://www.aboutads.info/choices/ பார்வையிடுவதன் மூலம் பயனர்கள் ஆர்வம் அடிப்படையிலான விளம்பரத்திற்காக DoubleClick குக்கீயைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். ஐரோப்பியப் பயனர்களுக்கு http://www.youronlinechoices.eu க்குச் செல்லவும்.

Google Analytics தனியுரிமை அறிவிப்பு

எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவது பற்றியத் தகவல்களைச் சேகரிக்க எங்கள் வலைத்தளம் Google Analytics -ஐப் பயன்படுத்தலாம். Google Analytics பயனர்களிடமிருந்து வயது, பாலினம், ஆர்வங்கள், புள்ளிவிவரங்கள், அவர்கள் எத்தனை முறை எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடுகிறார்கள், அவர்கள் எந்தப் பக்கங்களைப் பார்வையிடுகிறார்கள், எங்கள் வலைத்தளத்திற்கு வருவதற்கு முன்பு அவர்கள் பயன்படுத்திய பிற வலைத்தளங்கள் போன்ற தகவல்களைச் சேகரிக்கிறது. போக்குவரத்தைப் பகுப்பாய்வு செய்வதற்கும், எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பயனர்களுக்கு மறுவிற்பனை செய்வதற்கும், எங்கள் சந்தைப்படுத்தல், விளம்பரம் மற்றும் எங்கள் வலைத்தளத்தை மேம்படுத்துவதற்கும் Google Analytics -லிருந்து பெறும் தகவல்களை நாங்கள் பயன்படுத்தலாம். Google Analytics, Google Display நெட்வொர்க் தாக்கம் அறிக்கையிடல் மற்றும் Google Analytics மக்கள் பற்றிய புள்ளிவிவரம் மற்றும் ஆர்வம் அறிக்கையிடல் போன்ற மறு சந்தைப்படுத்துதல் போன்ற Google Analytics விளம்பர அம்சங்களை நாங்கள் இயக்கலாம். Google Analytics நீங்கள் எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிட்ட தேதியில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஐபி முகவரியை மட்டுமே சேகரிக்கிறது, உங்கள் பெயர் அல்லது அடையாளம் காணும் தகவலை  அல்ல. Google Analytics பயன்படுத்திச் சேகரிக்கப்பட்ட தகவல்களை தனிப்பட்ட தரவுகளுடன் நாங்கள் இணைப்பதில்லை. அடுத்த முறை எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடும்போது உங்களை ஒரு தனிப்பட்ட பயனராக அடையாளம் காண Google Analytics உங்கள் இணைய உலாவியில் நிரந்தர குக்கீயை வைத்தாலும், குக்கீயை Google தவிர வேறு யாரும் பயன்படுத்த முடியாது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவது பற்றியத் தகவல்களைச் சேகரிக்கக் குறிப்பிட்ட அடையாளங்காட்டிகளைக் கூட Google பயன்படுத்தலாம். உங்கள் தரவை Google எவ்வாறு சேகரிக்கிறது மற்றும் செயலாக்குகிறது என்பது பற்றியக் கூடுதல் தகவலுக்கு, https://www.google.com/policies/privacy/partners/ பார்வையிடவும்.

இந்த இணைப்பில் விலகுதல் விருப்பத்தேர்வை தேர்ந்தெடுப்பதன் மூலம் Google Analytics உங்கள் தகவல்களைப் பயன்படுத்துவதை நீங்கள் தடுக்கலாம்: https://tools.google.com/dlpage/gaoptout.

Google Remarketing

எங்கள் வலைத்தளம் மறு சந்தைப்படுத்துதல் விளம்பரச் சேவையைப் பயன்படுத்தலாம். Google மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கிய மறு சந்தைப்படுத்துதல் சேவைகள் இணையம் முழுவதும் வலைத்தளங்களில் விளம்பரங்களைக் காட்டுகின்றன. மறு சந்தைப்படுத்துதல் மூலம் நீங்கள் முன்பு பார்த்த தயாரிப்புகளுக்கான விளம்பரங்களை நீங்கள் மீண்டும் காணலாம். உதாரணமாக, நீங்கள் கணினிகளை விற்கும் வலைத்தளத்தைப் பார்வையிட்டீர்கள் ஆனால் அந்த வலைத்தளத்திற்கு உங்கள் முதல் வருகையின் போது நீங்கள் ஒரு கணினியை வாங்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் பார்வையிடும் பிற வலைத்தளங்களில் அதே அல்லது இதே போன்ற விளம்பரத்தை மீண்டும் காண்பிப்பதன் மூலம் வலைத்தளத்தின் உரிமையாளர் உங்களை மீண்டும் பார்வையிடவும், கணினியை வாங்கவும் ஊக்குவிக்க விரும்பலாம். இதேபோன்ற நோக்கங்களுக்காக நாங்கள் மறு சந்தைப்படுத்துதலை பயன்படுத்தலாம். இது நடக்க வேண்டுமென்றால், Google உங்கள் உலாவியில் ஏற்கனவே உள்ள ஒரு குக்கீயைப் பார்க்கும், அல்லது மறு சந்தைப்படுத்துதலைப் பயன்படுத்தி எங்கள் தளம் அல்லது பிற தளங்களைப் பார்வையிடும்போது அவை உங்கள் உலாவியில் ஒரு குக்கீயை வைக்கும்.

இந்த இணைப்பில் Google குக்கீகள் மற்றும் மறு சந்தைப்படுத்துதல் ஆகியவற்றைப் பயன்படுத்துவதிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளலாம்: https://support.google.com/ads/answer/2662922?hl=en அல்லது நெட்வொர்க் விளம்பரப்படுத்தல் முன்னெடுப்பு விலக்கு பக்கத்தைப் பயன்படுத்தி நீங்கள் விலகிக்கொள்ளலாம்: http://optout.networkadvertising.org/#!/.

Facebook Remarketing

Facebook உள்ளிட்ட மூன்றாம் தரப்பினர், எங்கள் வலைத்தளத்திலிருந்தும், இணையத்திலிருந்தும் தகவல்களைச் சேகரிக்க அல்லது பெற குக்கீகள், இணைய பீக்கான்கள் மற்றும் பிற சேமிப்பகத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம், மேலும் அந்தத் தகவலை அளவீட்டுச் சேவைகள் மற்றும் இலக்கு விளம்பரங்களை வழங்கப் பயன்படுத்தலாம். Facebook மறு சந்தைப்படுத்துதல் மூலம் நீங்கள் எங்கள் தளத்தைப் பார்வையிட்ட பிறகு பேஸ்புக்கில் எங்கள் விளம்பரங்களைக் காணலாம். இது நடக்க, Custom Audience Pixel -ஐ Facebook பயன்படுத்துகிறது, இது ஒரு பார்வையாளர் வலைப்பக்கத்திற்கு வரும் போது செயல்படுத்தப்படும் மற்றும் பார்வையாளர்களின் உலாவியில் ஒரு தனித்துவமான “குக்கீ” வைக்கப்படும். Facebook அதேபோல் தோற்றமளிக்கும் பார்வையாளர்களைக் குறிவைப்பது, எங்களைப் போன்ற வலைத்தளங்களை ஏற்கனவே எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிட்டவர்களைப் போன்றவர்களுக்கு Facebook -இல் விளம்பரங்களைக் காட்ட அனுமதிக்கிறது. விளம்பர இலக்கிலிருந்து விலக Facebook -இன் சேகரிப்பு மற்றும் தகவல்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கு இங்கு செல்லவும்: https://www.facebook.com/help/568137493302217.

உங்கள் தனிப்பட்ட தகவல்கள் குறித்து எங்களைத் தொடர்புகொள்ளுதல்

இந்த அறிவிப்பின் மேற்பகுதியில் காணப்படும் தொடர்புத் தகவல்களைப் பயன்படுத்தி நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம் மற்றும் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்துவதைப் புரிந்துகொள்வதில் உங்களுக்கு நாங்கள் உதவுவோம். ஆனாலும், எங்கள் ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவதற்கும் எந்தவொரு சட்டப்பூர்வமான கடமைகளுக்கும் இணங்குவதற்கும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் வைத்திருக்கலாம்.

கண்காணிக்க வேண்டாம் அமைப்புகள்

எங்கள் வலைத்தளத்திற்குள் உங்கள் இயக்கத்தை எங்கள் வலைத்தளம் கண்காணிக்க வேண்டாம் என்று கோர உங்களுக்கு உதவும் அமைப்புகள் சில இணைய உலாவிகளில் உள்ளன. உங்கள் உலாவியின் பயனர் கையேட்டைப் படிப்பதன் மூலம் உங்கள் உலாவியில் கண்காணிப்பு அம்சங்கள் மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளை நீங்கள் முடக்கலாம்.

எங்கள் மின்னஞ்சல் கொள்கை

நாங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியை நாங்கள் சேகரிப்பதில்லை. எங்கள் வணிக நடைமுறையின் ஒரு பகுதியாக, இந்த அறிவிப்பின் மேலே பட்டியலிடப்பட்டுள்ள தொடர்புத் தகவலைப் பயன்படுத்தி நீங்கள் எங்களைத் தொடர்பு கொண்டால் தவிர, நாங்கள் உங்களை மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ள மாட்டோம். நீங்கள் மின்னஞ்சல் வழியாக எங்களைத் தொடர்பு கொண்டால், நீங்கள் தொடங்கும் தகவல்தொடர்புக்கு மட்டுமே நாங்கள் பதிலளிப்போம். இந்த அறிவிப்பில் விவரிக்கப்பட்டுள்ள உங்கள் தனிப்பட்ட தகவல்களைக் கையாள்வது தொடர்பான கொள்கைகளுக்கு ஏற்ப உங்கள் மின்னஞ்சல் முகவரியை நாங்கள் கையாள்வோம்.

உங்கள் கிரெடிட் கார்டின் பயன்பாடு

எங்கள் வலைத்தளம் நிதிப் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துவதில்லை.

COPPA (குழந்தைகள் ஆன்லைன் தனியுரிமைப் பாதுகாப்பு சட்டம்)

நாங்கள் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடமிருந்து தனிப்பட்ட தகவல்களைத் தெரிந்தே சேகரிப்பதில்லை. நீங்கள் ஒரு பெற்றோர் அல்லது பாதுகாவலராக இருந்தால், உங்கள் பிள்ளை எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துகிறார் என்று நம்பினால், தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளவும். எங்கள் பயனர்களின் வயதை நாங்கள் சரிபார்க்கவில்லை என்பதையும், அவ்வாறு செய்வதற்கு எங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்பதையும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

எங்கள் தனியுரிமைக் கொள்கை பற்றியக் கேள்விகள்

எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் பற்றி எவையேனும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து இந்த அறிவிப்பின் மேற்பகுதியில் அளிக்கப்பட்டுள்ள தகவலைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.


உலகளவில் உள்ள மருத்துவ ஆராய்ச்சித் தலங்களுக்கு தற்போது ஆளெடுத்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் அருகேயுள்ள ஓர் ஆராய்ச்சித் தலத்தை அறிவதற்கு, தயவுசெய்து இங்கே சொடுக்கவும்

GB 4.1.5.3 Cessa flavicon.png
 

செஸ்ஸா என்பது, அல்சரேட்டிவ் கோலைட்டிஸ் உள்ள நோயாளிகளுக்கான ஒரு நடப்பு மருத்துவ ஆய்வின் பெயர். இது வணிக ரீதியாகக் கிடைக்கக்கூடிய ஒரு சிகிச்சை அல்ல.

உங்களுக்கு ஐபிடி தொடர்பான அறிகுறிகள் இருந்தால், உங்கள் இரைப்பைக் குடலிய நிபுணரை தொடர்புகொள்ளவும்.